திருட்டைத் தடுக்க ‌திடீர் வாகன சோதனை – அலார்டான திருச்சி போலீஸ் !

0
1

திருச்சி மாநகர பகுதிகளில் போன் பேசிக்கொண்டு செல்பவர்களிடம் இருசக்கர வாகனத்தில் வரும் கும்பல் செல்போனை பறித்து செய்வதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. மேலும் இப்படி திருட வரும் நபர்களும் இளம் வயதினராக இருப்பதாக திருச்சி மாநகர காவல் துறையினருக்கு தகவல் போயிருக்கிறது. இப்படி திருடப்படும் நேரங்களும் மாலை அல்லது இரவு என்று போலீசார் வரையறுத்தனர்.

இதையடுத்து நேற்று ஆகஸ்ட் 28 திடீரென்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் வாக்கிடாக்கி நிலையமாக திருச்சி மாநகர காவலில் இருந்து அதிரடி உத்தரவு வந்தது. அப்படி திருச்சி மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து அதிகாரிகளும் மற்றும் காவலர்களும் உடனடியாக வாகனச் சோதனையில் ஈடுபட்ட உத்தரவிட்டனர்.

இதையடுத்து நேற்று இரவு திருச்சி மாநகர் பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் திடீரென்று வாகனச் சோதனை நடைபெற்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர், மேலும் வாகனம் ஓட்டி வரும் இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

3

Leave A Reply

Your email address will not be published.