திருச்சி மக்களே உஷார் ; 50,000 கிலோ போலி பாக்கெட் அரிசி பறிமுதல்!

0
1

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று 28.08.2021 சனிக்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், காவல் துறையினர், வணிகவரி துறையினர் கொண்ட குழுவால் அரிசி மண்டிகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்படி பிரபல கர்நாடகா நிறுவனத்தின் பெயரில் போலி அரிசிகள் தயாரித்து விற்கும் சுமார் 8 மொத்த விற்பனையாளர் கடைகளும் சுமார் 6 குடோன்களும் மற்றும் ஒரு போலியாக பைகள் தயாரிக்கும் அச்சக கடையும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு ஆய்வின்போது சுமார் 50,000 கிலோ போலி பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 30,00,000 மதிப்புள்ள அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 7 சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு வழக்கு போடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுபோன்ற போலியான உணவு பொருட்களோ அல்லது கலப்பட உணவு பொருட்களோ விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் கலப்பட உணவு பொருட்களை கண்டறிந்தால் கீழே கொடுக்கபட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தெரிவித்தார்

புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண்
94 44 04 23 22

3

Leave A Reply

Your email address will not be published.