எஃப்.ஐ.ஆர் போடாத திருச்சி எஸ்.ஐ கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு!

0

திருச்சி மாவட்டம் வைய்யம்பட்டி அருகே உள்ள பொன்னம்பலம் பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரும், சின்னத்தம்பி என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த மோதலில் சின்னத்தம்பி, அவரது மகன் ரமேஷ் அவரது மனைவி சாவித்திரி ஆகியோர் பெருமாள் மற்றும் அவரது மனைவி தங்கமணி ஆகியோரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தங்கமணி வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பிரச்சனைக்குரிய சின்னத்தம்பி குடும்பத்திற்கு ஆதரவாக எஸ்.ஐ செயல்படுவதாக கூறி பெருமாள் அவரது குடும்பத்தினருடன் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது சம்பந்தமாக டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தார். இந்த நிலையில் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இசை லாரன்ஸ் எப்ஐஆர் பதிவு செய்யாமல் இழுத்தடித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து எஸ்.ஐ லாரன்ஸ் கட்டாய விடுப்பு எடுத்து செல்லுமாறு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருக்கின்றனர். மேலும் தங்கமணி கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.