திருச்சி மாநகரின் முக்கிய பிரச்சினை இது தான் – தீர்க்கப்படுமா..!

0
1

என் திருச்சி இணைய இதழ் தனது முகநூல் பக்கத்தில் இன்று ஆகஸ்ட் 28 காலை திருச்சி மாநகரில் தற்போது முக்கியமான பிரச்சினை எது..? என்ற தலைப்பில் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு மக்கள் பலரும் கமெண்ட் மூலமாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர். இதில் பலரும் பல பிரச்சினைகளை முன் வைத்து இருந்தனர். அதில் திருச்சி மாநகரில் சாலை வசதி சரியில்லை போக்குவரத்து நெரிசல் என்ற கோரிக்கைகளே அதிகமாக காணப்பட்டன. அதில் சில முக்கிய பதிவுகள் தற்போது செய்திகளாக..

 

தில்லைநகர் இருந்து பால்பண்ணை செல்ல முகூர்த்த நாட்களில் 1.30 மணிநேரம் ஆகிறது. Traffic is crucial problem at trichy now

2

பிரபல மகப்பேறு மருத்துவர் ரோகையா.

_________________________

திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து குமரன் நகர், சீனிவாசநகர், உய்யக்கொண்டான் திருமலை, இரட்டை வாய்க்கால், சோமரசம்பேட்டை வரை பல்வேறு நெருக்கடியில் தினம் தினம் பல உயிர்கள் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. அதை தடுக்க சாலையை விரிவுபடுத்துவதோடு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து பெட்டவாய்த்தலை வரை உள்ள உய்யக்கொண்டான் ஆற்று கரையை பலப்படுத்தி அகலப்படுத்தி தார் சாலை அமைத்தால் தினம் தினம் நடைபெறும் நூற்றுக்கணக்கான விபத்துக்களை தடுக்கலாம்.

எம்.ஆர். முருகன் சோமரசம்பேட்டை.

____________________

1.பால்பண்ணை சந்திப்பில் டிராபிக் கொடுமை மேலும் அங்கு சிக்னல் செயல்படவில்லை அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2.அனைத்துவார்டுகளிலும் சாலை, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் முடிக்க வேண்டும்
3.ஆயிரம் உயிர்பலி மற்றும் உடல் ஊனம் நடைபெறக் காரணமான துவாக்குடி டூ பால்பண்ணை வரை வரவேண்டிய சர்வீஸ் சாலை அமைக்க உடனடியாக ஆவணம் செய்யவேண்டும், உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றவேண்டும் .

கார்த்திகேயன் அப்பாவு

_______________

பெரியகம்மாளத்தெரு, ஜாபர்ஷா தெரு, சிங்ஙாரத்தோப்பு

தியாகு தியாகராஜன்

________________

1. காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி EB ரோட்டை குப்பை கிடங்காக மாற்றி பொது மக்களுக்கும், மார்க்கெட் வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், வாகன ஓட்டிங்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது… சுற்றுப்புற சூழல் மிகவும் மாசு அடைந்து உள்ளது… அங்கு வாகன விபத்து அதிகமாக நடைபெறுகிறது…
2. வாழைக்காய் மண்டி எதிரில் உள்ள மதுபானா கடையில் மது வாங்குவோர் கடையின் அருகில் உள்ள தெருவில் வந்து மது அருந்திவிட்டு அந்த தெருவில் செல்பவர்கள் அங்கு குடி இருக்கும் மக்கள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கு ஆபத்தான முறையில் நடந்து கொள்கிறார்கள்… மேலும் காலி மது பாட்டில்களை நடு தெருவிலும், இ.பி ரோட்டிலும் மற்றும் அங்கு உள்ள சாக்கடையிலும் உடைத்து எரிகிறார்கள்… இதனால் அங்கு வாழும் பொது மக்கள் அச்சதுடன் வாழ்கிறார்கள்….

-கவுண்டர் லாரி பாலகுருநாதன்

________________

காவேரி பாலம் சரி செய்ய வேண்டும்….உங்களுக்கு புண்ணியமா போகும்…வண்டி ஓட்ட முடியவில்லை…(காவேரி பாலம் பற்றி பலரும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது)

சிவக்குமார்

______________

சரியான சாலை வசதி இல்லாதது, முக்கிய பகுதிகளில் தூய்மை என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது, நகரின் உள் தனியார் பேருந்துகளின் ஆதிக்க அத்துமீறல்கள், போதை பொருள் -திருட்டு சம்பவங்கள் கொடிகட்டி பறப்பது, இப்படி எண்ணற்ற குறைகளை மட்டுமே கொண்டுள்ளன… குறிப்பா நகராட்சியின் உட்பகுதியில் உள்ள பல முக்கிய ஏறியாக்களில் இன்னும் தார் சாலைகள் போடாமலே இருக்கிறது.

தளபதி பாண்டி கணேசன்

_______________

நீண்ட காலமாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மன்னார்புரம் இரயில்வே மேம்பாலம்…… விரைவில் கட்டிமுடிக்கப்பட வேண்டும்.

தமிழருண் பெரம்பலூர்

குறிப்பு என் திருச்சி முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்படும் மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் செய்தியாக வெளியிடப்படும்.

 

3

Leave A Reply

Your email address will not be published.