மரணவலி தணிப்பு சிகிச்சை 

0
1

மரணவலி தணிப்பு சிகிச்சை 

மரணவலி தணிப்புச் சிகிச்சை அல்லது ஆதரவு சிகிச்சை குணப்படுத்த இயலாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணத்தருவாயில் இருப்போரைக் கவனிப்பதற்கான சிகிச்சை பிரிவு.

2

அனைத்து மக்களும் ஒரு நாள் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும் புற்று நோய் போன்ற உயிர்க் கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நோயை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்தாலும் அந்த நோய்களால் ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் உடல் சார்ந்த பிற கஷ்டங்களையும் கட்டுப்படுத்தி ஒருவரின் இறுதி நாட்கள், வாரங்கள்  அல்லது மாதங்கள் அமைதியாகவும் , கண்ணியமானதாகவும் அமைய முயற்சிப்பது தான் ஆதரவு சிகிச்சையின் அடிப்படை நோக்கம்.

END OF LIFE CARE மருத்துவ பராமரிப்பு மற்றும் செவிலியர் கவனிப்பு ஆகியவை கொண்ட பல்நோக்கு மருத்துவ அணுகுமுறை ஆகும் . நோயாளிகளுக்கு ஏற்படும் வலி , மனஅழுத்தம் , நோய் உணர்குறி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது .

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், இறுதிக்கட்டத்தில் இருக்கும் ஒரு புற்றுநோயாளிக்கு திடீரென காய்ச்சல் அதிகரிக்கும் அப்போது அவருக்கு காய்ச்சல் மாத்திரைகள் கொடுப்பது. வாந்தி அதிகமானால் ஒரு எமிசெட் மாத்திரை தருவது வலியைக் குறைக்க மார்ஃபின் கொடுக்கப்பது என அறிகுறிகளுக்கு ஏற்ப வலி நிவாரணிகளை வழங்கப்படும் .

இதை ஆங்கிலத்தில் சிம்ப்டமேட்டிக் ட்ரீட்மென்ட் (Symptomatk treatment ) என்பர்.

3

Leave A Reply

Your email address will not be published.