திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 24 மணிநேரமும் செயல்படும் கொரோனா தடுப்பு மையம் !

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடின்றி அனைத்து நேரங்களிலும் செலுத்திடும் வகையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் செயல்பட்டு வரக்கூடிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படி உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் சுப்பிரமணியபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் என்று மாநகர் பகுதிகளில் பரவலாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி மையங்கள் ஆகஸ்ட் 27 நாளை முதல் செயல்பட உள்ளது என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 23ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தடுப்பு மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
