திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் ; கலெக்டர் தகவல்!

0
1

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது,

2

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான டிப்ளமோ முதலாமாண்டு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. முதல் கலந்தாய்வில் விண்ணப்பித்த மாணவர்கள் போக மீண்டும் விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
விண்ணப்பிப்பவர்கள் 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. எஸ்.சி எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

மேலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை கல்லூரி வங்கிக் கணக்கு மற்றும் இதர தகவல்களை www.gptcsrirangam.com என்ற இணைய முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

3

Leave A Reply

Your email address will not be published.