திருச்சி ரயில் நிலையத்தில் 3 கிலோ தங்கம் சிக்கியது ; கணக்கு காட்டாத பிரபல நகை கடைக்கு அபராதம்!

0
1

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய அதிகாரிகள் பயணிகளின் உடமைகளையும், பயணிகளையும் பரிசோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் பேக்கில் அளவுக்கதிகமாக தங்கநகை இருப்பது சோதனை இயந்திரத்தின் மூலமாக தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பேக்கிற்கு சொந்தமான இரண்டு நபர்களையும் அழைத்துச் சென்று தனியே விசாரித்தனர். அவர்கள் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த லப்பை தம்பி என்பதும் மற்றொருவர் முகமது ரியாஸ் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் மயிலாடுதுறையில் இயங்கக்கூடிய பிரபல நகை கடைக்கு இந்த நகையை கொண்டு சென்றது தெரியவந்தது. இதை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 3 கிலோ 260 கிராம் தங்க நகைகளை கணக்கு காட்டாமல் மறைத்து எடுத்துச் சென்றதும் அதன் மதிப்பு 1.50 கோடி ரூபாய் இருக்கும் என்று தெரியவந்தது.இதை அடுத்து 9 லட்சத்து 16 ஆயிரத்து 624 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இதையடுத்து பிரபல நகைக்கடை ஆன்லைன் மூலமாக அபராத தொகையை செலுத்தி அடுத்து தங்க நகை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.