திருச்சியில் கடன் வாங்கிய பெண் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை!

0
1

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மற்றும் அவரது தோழி பர்கீஸ் பானு இருவரும் சேர்ந்து மகளிர் சுய உதவி குழுவில் கடன் வழங்கி இருக்கின்றனர். மகளிர் சுய உதவிக் குழுவினர் கடனை திருப்பி கேட்க, பர்கீஸ் பணத்தையும் தனது தோழி லட்சுமி பணத்தையும் செலுத்தி இருக்கிறார்.

Helios
2

இந்த நிலையில் பல முறை லட்சுமி இடமிருந்து பானு லட்சுமியிடம் இருந்து பணத்தை திருப்பி கேட்டிருக்கிறார். ஆனால் லட்சுமி தொடர்ந்து இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பர்கீஸ் திருவரம்பூர் காவல் நிலையத்தில் கடந்த 22ஆம் தேதி புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்து லட்சுமி வீட்டில் எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.