ரெட்டமலை ஒண்டி கருப்பு சாமி திருச்சி வந்ததெப்படி? தெரிந்துகொள்வோமா?

0

அக்காலத்தில் கேரளாவின், ஆனைமலை பக்கத்தில் உள்ள அமராவதி ஆற்றங்கரையில் ஒரு அந்தணர்  இருந்தார். அவர் பஞ்சலோகத்தால் ஆன 18 தெய்வ உருவங்களை வைத்து பூஜை செய்து வந்தார். ஒருநாள் குதிரை மீது அமர்ந்து கொண்டிருப்பது போல அவர்  பூஜை செய்து வந்த அந்த உருவம் அவருடைய கனவில் வந்தது. தான் முத்தையா என்ற  பெயர் கொண்ட கருப்பண்ண சாமி காவல் தெய்வம் எனவும், இந்த விக்ரகங்களை பட்டுத்துணியில் முடிந்து அமராவதி ஆற்றில் விடும்படியும், அந்த அந்தணருக்கு முக்தி அளிப்பதாக கூறியது. அதன்படியே நடந்தது.

ஆற்றில் விடப்பட்ட பெட்டி கரூருக்கு பக்கத்தில்  தழுதாழை என்ற ஊருக்குப் பக்கத்தில் இரு பனை மரங்களுக்கு இடையில் தேங்கி நின்றது .இதனை நல்லதம்பி என்ற மாடுமேய்க்கும் சிறுவன் பார்த்துவிட்டு பெட்டியை எடுத்துவந்தான்.

அன்றைக்கு நல்ல தம்பி கனவில் வந்த கருப்பண்ணசாமி அங்கு இருக்கிற மற்ற தெய்வங்கலோடு சேர்த்து தன்னையும் வழிபட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லியது நல்ல தம்பியும் அதேபோல செய்தான்.

நல்லதம்பி அந்த ஊர் பண்ணையாருடைய மகன், சின்னவயதில் பெற்றோர் இறந்ததால், அவனுடைய சொத்துக்கள் பங்காளிகளால் அபகரிக்கப்பட்டு, இறுதியில் மாடுமேய்க்கும் நிலைக்கு வந்துவிட்டான்.

கருப்பண்ணசாமி நல்லதம்பி உடைய சொத்துக்களையெல்லாம் மீட்டு மறுபடியும் பழையபடி பண்ணையாராக உன்னை வாழ வைக்கிறேன் என்று உறுதிபடுத்தினார். அதன்படி நல்லதம்பி உடைய ஆடு மாடுகள் எல்லாம் பல்கிப்பெருகி அவ  செழிப்புடன் வாழத்தொடங்கினான்.

இதனை பார்த்த பங்காளிகள் இதற்கான காரணத்தை அறிய முட்பட நல்லதம்பிக்கு பயம் வந்துவிட்டது.

அந்த சமயத்தில் இந்த தெய்வங்களுக்கு ஒரு கோவில் கட்ட முடிவு செய்தான். அப்போது, திருச்சி நவல்பட்டைச் சில வியாபாரிகள் வியாபார விஷயமாக தழுதாழை கிராமத்துக்கு வந்தார்கள்., நல்லதம்பி அவர்களை சந்தித்து விக்கரங்கள் பற்றிய விவரங்களை அவர்களிடம் சொல்ல, தங்களுடைய ஊரான நவல்பட்டுல அந்த தெய்வங்களுக்கு ஒரு கோயில் கட்டுவதாக சொல்லி அந்த விக்ரகங்களை வாங்கிட்டு  தங்களுடைய ஊரை நோக்கி வரும் வழியில் இரவு வெகுநேரமாகிவிட்டது. அதனால் இரட்டை மலைக்குக்கு பக்கமாய் இருந்த மலை காளி கோவிலில் தங்கினர். மறுநாள் சிலைகளை எடுக்க முயல அவர்களுக்கு கண்பார்வை போனது.

அந்த ஊருக்கு பக்கத்துல இருந்த பிராட்டியூர் மக்கள் அவஙகளுக்கு உதவி செய்தார்கள். அங்கிருந்த மாரியம்மன் கோவிலில் உள்ள சாமியாரிடம் குறி கேட்டபோது, அந்த சிலைகளில் உள்ள கருப்புசாமி, ஒண்டி கருப்பு அப்படிங்கற பெயரில் அங்கேயே இருக்க விரும்புவதாகவும் , அதனாலதான் அந்த இடத்தை விட்டு நகர மறுக்கிறார்னு அந்த குறி சொன்னாரு.அவர்களும் அதற்கு இணங்கி கோவில் கட்டுவதாக வாக்களிக்க, அவர்களுக்கு கண்பார்வை வந்தது.

அதனால நாவல்பட்டுகாரங்க ரெட்டமலையில ஒண்டி கருப்புக்கு ஒரு சிறிய கோவிலை எழுப்பி தெய்வமாக வணங்க ஆரம்பித்தனர்

அவரை குலதெய்வமாக கொண்டு ஆடிமாதம் தோறும் திருவிழா நடத்தி வருகின்றனர்.

மலை காளி, அய்யனாரு, விநாயகர், நீலமேகம் சாமி, மதுரை வீரன், உதிர கருப்பு போன்ற தெய்வங்களும் இங்க இருக்கு.

கோயிலுக்கு வெளியில இருக்குற உதிர கருப்பண்ணசாமி கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாது .இந்த சன்னதியில் ஆடுகளும் கோழிகளும் பலியிடப்படுது .

கேரளாலிருந்து ஆத்துல மிதந்து வந்த  18 சிலைகள் அடங்கிய பெட்டி இப்ப கோவிலுக்கு பின்னாடி இருக்கிற இரட்டைமலைக் மேல   இருக்கு 

அங்கே ஒரு சிறிய குகையும் அந்த குகைகொள்ள ஒரு ஆளு மட்டுமே  தவழ்ந்து போறது மாதிரி ஒரு சிறிய வழி இருக்கு . அப்படிப்பட்ட குகைக்குள் தான் சாமிகள் அடங்கிய அந்தப் பெட்டி உள்ளது.

வாசல்ல ஒரு சின்ன கதவு பூட்டப் பட்ட நிலையில் உள்ளது. சிலைகளை எல்லாம் ஒரு நாகம் காவல் காப்பதாக சொல்லப்படுகிறது. அந்த நாகம் குகைக்குள்ள போயிட்டு வர அந்த கதவுல சிறிய துவாரம் ஒன்று உள்ளது . அந்தக் கதவுக்கு முன்னாடி முட்டையும் பாலையும் வச்சு மக்கள் வழிபட்டு வராங்க.

ஆண்டுக்கு ஒருமுறை நவல்பட்டுகாரங்க வந்து அந்த குகையில உள்ள  சிலை இருக்கிற பெட்டியை வெளியே எடுத்து. அதுல இருக்கும் சிலைகளுக்கு அபிஷேகம் செஞ்சு ,கோயில்ல வச்சு பூஜை செய்வாங்க.

கோவிலுக்கு வெளியில் வெட்ட வெளியில் ஒரு பெரிய கல்லுல குதிரை மேல் கருப்பு சாமி உருவமும், அறிவாளும் செதுக்கப்பட்டிருக்கு.இதுதான் வேட்டை கருப்பணசாமி.

மூலஸ்தான மூர்த்தியான ஒண்டி கருப்பண்ணசாமி தினந்தோறும் வேட்டைக்குப் போவதாக அங்கு ஒரு  பக்தர்கள் நம்புகின்றனர்.

மற்றொரு கதை திருச்சி புத்தூரில் உள்ள குழுமாயி அம்மனை கேரள மந்திரவாதி கட்டுப்படுத்தி தனக்கு தேவையானதெல்லாம் செய்துகிட்டு வந்தாருக்கிறார். அவர் வேட்டைக்கு போகும்போது அந்த குழுமாயி அழுதுகிட்டு இருப்பதை பார்த்தார். அவர் காரணம் கேட்கவே மந்திரவாதியின் செயலை அவள் கூற, கருப்பணசாமி அந்த மந்திரவாதியை  ஒரே அடியில் கொன்று குழுமாயி அம்மனை காப்பாற்றுகிறார். ஒண்டியாக நின்று மலையாள மந்திரவாதியை கொன்றதால் ஒண்டிக்கருப்பணசாமி என பெயர் பெற்றார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு குழுமாயி அம்மனுடைய காவல் தெய்வமாகவும் இருக்கிறார் ஒண்டி கருப்பண்ணசாமி.

இன்றைக்கும் குழுமாயி அம்மன் கோவிலில் முதல் பூஜை ஒண்டி கருப்பண்ணசாமிக்கு தான் நடைபெற்றது.

அதற்குப்பிறகுதான் அம்மனுக்கு பூஜையானது செய்யப்படுது .

 

 

Leave A Reply

Your email address will not be published.