திருச்சியில் முழுநேர கூட்டுறவு பட்டயப் பயிற்சி: 

0

திருச்சியில் முழுநேர கூட்டுறவு பட்டயப் பயிற்சி: 

திருச்சி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2021-22ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு பட்டயப்பயிற்சி நடத்தப்பட உள்ளது. 9 மாத காலத்திற்கான இப்பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய இணையதளத்தில் ( www.tncu.tn.gov .in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு அஞ்சல் மூலம் எண் .1 பழைய குட்செட் ரோடு , அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகம் , திருச்சி -2 எனும் முகவரியில் செயல்படும் திருச்சி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் செப் . 15 ம் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் .

மேலும் இது குறித்து தகவல்களை 0431-27156748 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.