“டிக்” அலுவலகத்தில் வரும் 27ம் தேதி சிறப்பு தொழில் கடன் மேளா

தொழில் முனைவோர் பங்கேற்கலாம் - கலெக்டர் அழைப்பு

0

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற கழக மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் சிறு, குறு மற்றும் நடுத்தர(எம்எஸ்எம்இ) தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும் உற்பத்தியை பன்முகப் படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது

திருச்சி கிளை அலுவலகம் எண் 33 இரண்டாவது தளம் கேஆர்டி கட்டிடம் பிராமினெட் சாலை, கண்டோன்மெண்ட், திருச்சி 1 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் எம் எஸ் எம் இ தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் பெற வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது

இந்த கடன் மேளாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய-மாநில அரசுகளின் மானியங்கள் மூலதன மானியம் 6 சதவீதம் வட்டி மானியம், இதர மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் அதிகபட்சம் ரூ.1.5 கோடி வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும் நீட்ஸ் திட்டத்தில் ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது இந்த அரிய வாய்ப்பை திருச்சி மாவட்ட தொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென திருச்சி மாவட்ட கலெக்டர்  சிவராசு தெரிவித்துள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.