பேரக்குழந்தைகளின் அரவணைப்பில் தாத்தா,பாட்டி இணைந்த புகைப்படம் ntrichy.com தடம் இதழில் இடம் பெற…

0
1

பேரக்குழந்தைகளின் அரவணைப்பில் தாத்தா,பாட்டி இணைந்த புகைப்படம் ntrichy.com தடம் இதழில் இடம் பெற…

“குழந்தைகளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு, பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு, நாய்களோடு வாக்கிங் போகிற நவநாகரீக உலகமிது” எனத் தொடங்குகிறது ஒரு இளைஞனின் எழுத்து. தாத்தா ஒரு நூலகம். பாட்டி ஒரு நடமாடும் மருத்துவமனை. நூலகத்தின் அறிவும், மருத்துவத்தின் துணையும் அருகிருந்தும் தூரமாகிப் போன குழந்தைகளுக்கிடையில் தங்கள் தாத்தாவுடனும், பாட்டியுடனும் சுதந்திரப் பறவைகளாய் – கூண்டுகளை எறிந்துவிட்டு கூடுகளில் வாழும் குழந்தைகளின் உணர்வை ஒளிப்படமாய் தரும் பகுதி இது.

 

2

பத்து வயதில் அழகோடு இரு!
இருபது வயதில் அறிவோடு இரு!
முப்பது வயதில் கல்வியோடு இரு!
நாற்பது வயதில் செல்வத்தோடு இரு!
ஐம்பது வயதில் அனுபவத்தோடு இரு!
அறுபது வயதில் சந்ததியோடு இரு!
அதற்குமேல் நிம்மதியோடு இரு!

இது தான் வாழ்க்கைக்கான சூத்திரம். அந்த சூத்திரத்தில் இயங்கி, அட்சய பாத்திரமாய், அழுதசுரபியாய், போதி மரங்களாய் உடனிருக்கும் தாத்தா பாட்டிகளோடு குழந்தைகள் அளவளாவது எதிர்காலத்திற்கான நிகழ்கால நம்பிக்கை. மூப்பெய்தியும் முடங்கிவிடாமல் மூன்றாம் கால்களின் உதவியுடன் சுற்றிச்சுழலும் நம்பிக்கை விழுதுகளை கரம் பற்றிச் செல்லும் உங்கள் வேர்களோடு செய்திடுங்கள் ஒரு ‘க்ளிக்’.

நீங்கள் எடுத்த புகைப்படத்தை எங்களுக்கு ntrichynews@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கோ அல்லது 98424 10090 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கோ அனுப்பிடுங்கள். அவை என் திருச்சி.காமின் தடம் பக்கங்களில் பிரசுரமாகும்.

3

Leave A Reply

Your email address will not be published.