ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி .. !

0
1

ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி .. !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் , ‘ ஆடு வளர்ப்பு’ பற்றிய பயிற்சியினை 10 நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறது .

பயிற்சி பெற முதல் தகுதி அந்த நபர் கிராமப்புற வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இளைஞராக இருக்க வேண்டும். வருகிற 26ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சி வழங்குவதோடு வங்கிக் கடன் பெற முழு ஆலோசனை வழங்கப்படுகிறது . பயிற்சி பெற விரும்புவோர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் , 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும் .

2

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நூறு நாள் அட்டை . ஆதார் அட்டை , ரேஷன் அட்டை , சாதி சான்றிதழ் , கல்வி சான்றிதழ் , மாற்று சான்றிதழ் , வங்கி புத்தகம் மற்றும் பான் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் 3 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தையும் கொண்டு வர வேண்டும் . பயிற்சி போது காலை , மதிய உணவு மற்றும் தேநீர் இலவசமாக வழங்கப்படும் . பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நேரில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் .

மேலும் விபரம் அறிய : 04312412825 , 99947 37185 , 73975 12544 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

3

Leave A Reply

Your email address will not be published.