தனியார் பள்ளிகளில் இலவச கல்வி ; நாளை குலுக்கல் முறையில் தேர்வு – மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு !

0

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு குறிப்பிட்டுள்ளது, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் திட்டத்தின்படி ஒவ்வொரு கல்வியாண்டிலும் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இவ்வாறு 306 பள்ளிகளில் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை இணைய வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் 132 பள்ளிகளுக்கு இட ஒதுக்கீட்டுக்கு மேல் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்ததால் மாணவர்களை தேர்வு செய்ய குலுக்கல் முறையில் நாளை ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குலுக்கலில் பங்கேற்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.