கடன் தொகையை செலுத்தியும் நகையை திருப்பி தராத வங்கி நிர்வாகம் – வங்கியை முற்றுகையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்!

0
1

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ந.பூலாம்பட்டி கிளையில் விவசாயி ராகவன் என்பவர் நகையை அடகு வைத்து இருக்கிறார். அந்த சமயத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த இருக்கிறார்.

இந்த நிலையில் விவசாயி ராகவனுடைய மனைவி சுலோச்சனா கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டு நகையை கேட்டு இருக்கிறார். ஆனால் வங்கி நிர்வாகம் உங்கள் பெயரில் மாற்று கடன் உள்ளதால் திருப்பித் தர முடியாது என்று கூறி மறுத்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்று வங்கியின் கிளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை அடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒரு வார காலத்திற்குள் நகையை திருப்பித் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வங்கியின் மேலாளர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.