திருச்சி தில்லைநகரில் கலை பொருட்கள் சங்கமிக்கும் காஸ்மிக்..!

0
1

திருச்சி தில்லைநகரில் கலை பொருட்கள் சங்கமிக்கும் காஸ்மிக்..!

வெற்றிக்கான நினைவுகளும், மகிழ்ச்சிக்கான நினைவுகளும் மீண்டும் மீண்டும் நம் மனதிற்குள், எண்ணத்திற்குள் காட்சிகளாக விரிந்து நம் நினைவலைகளில் தோன்றி நம்மை அதே மகிழ்ச்சிக்குரிய தருணத்திற்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தும். அத்தகையதொரு நினைவுகளை, மகிழ்ச்சிகளை மீளுருவாக்கம் செய்வது நினைவுப் பரிசுகளும், சின்னங்களும் தான்.
இப்படி வரலாறாய் விளங்கி நிலைக்கக்கூடிய பரிசுகளையும் அன்பளிப்புகளையும் தயாரித்து வழங்கும், பரிசு பெட்டகத்தின் உலகமாக திகழ்கிறது “காஸ்மிக்ஸ் ஆர்ட் கேலரி அண்ட் கிராப்ட்ஸ்”.

ஆகஸ்ட் 16-31, 2021 பிசினஸ் திருச்சி இதழில் வெளிவந்தது
2

திருச்சி, தில்லைநகர் கிழக்கு  7வது கிழக்குத் தெருவில் அமைந்திருக்கக் கூடிய “காஸ்மிக்ஸ் ஆர்ட் கேலரி அண்ட் கிராப்ட்ஸ்”, கலைகளின் சங்கமம் என்று சொல்லுமளவிற்கு எண்ணிலடங்கா வகையில் வண்ண ஓவியங்களும், அழகிய புகைப்படங்களும், கவர்ச்சியான பதக்கங்களும், கம்பீரமான கோப்பைகளும், அழகிய சிலைகளும் பிரத்தியேக பரிசுப் பொருட்களும் என்று விதவிதமான வகையில் தரமான பொருட்களை குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறது “காஸ்மிக்ஸ் ஆர்ட் கேலரி அண்ட் கிராப்ட்ஸ்”.

ஓவியங்கள், மெமண்டோஸ், பரிசுப் பொருட்கள், லேமினேஷன், சிற்பம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை பிளாஸ்டிக் மற்றும் சில்வர்களில் மிகச் சிறப்பான முறையில் தயாரித்துத் தரும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் கார்த்திக் நம்மிடம் கூறுகையில், “இந்தத் தொழிலில் 40 வருட அனுபவம் இருக்கிறது. ஆரம்பத்தில் திருச்சி, சூப்பர் பஜாரில் தொடங்கினோம்.

வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கான நினைவு மற்றும் பரிசுப் பொருட்களை தயார் செய்து தருகிறோம். தமிழரின் வீர விளையாட்டான கபடி போட்டியில் பங்கேற்பாளர்களுக்கு வழங்கும் கோப்பைகள் 5 அடி முதல் 10 அடி வரை அவர்கள் விரும்பிய வண்ணங்களில், வடிவங்களில் செய்து கொடுக்கிறோம்.

எங்கள் தயாரிப்பு நினைவு பரிசுப் பொருட்களுடன் ஒப்பிடும் போது, ஆன்லைன் ஷாப்பிங்கில் சுமார் 50 முதல் 80 சதவீதம் வரை லாபம் வைத்து விற்கிறார்கள். ஆனால் நாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு 20 சதவீதம் லாபம் கிடைத்தாலே போதும் என்ற அளவிலேயே விற்பனை செய்கிறோம்” என்றார்.

தஞ்சாவூர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள், கடவுள் சிலைகள், பதக்கங்கள், விளையாட்டு மற்றும் போட்டிக்கான நினைவுக் கேடயம் மற்றும் பரிசுப் பொருட்கள், பிறந்த நாள் பரிசு பொருட்கள், மரத்தினால் மற்றும் கண்ணாடியினால் செய்யப்பட்ட பரிசுப் பொருட்கள், கீசெயின்கள் என அனைத்து விதமான நினைவில் நிற்கும் சின்னங்களை பலவிதமான வண்ணங்களில், வடிவங்களில் தரமாகவும், சரியான விலையிலும் பெற விரும்புவோர் காஸ்மிக்ஸ் ஆர்ட் கேலரி அண்ட் கிராப்ட்ஸை அணுகலாம்.

காஸ்மிக்ஸ் ஆர்ட் கேலரி அண்ட் கிராப்ட்ஸ்
தொடர்பு எண் : 0431- 4220609, 99524 06241
                          இணையதள முகவரி :www.cosmicsartgallery.in

Email:

cosmictrichy@gmail.com

-இப்ராகிம்

 

3

Leave A Reply

Your email address will not be published.