திருச்சியில் வேர்கள் அறக்கட்டளையின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு!

0
1

வேர்கள் அறக்கட்டளையின் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடட்டம் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது –2021 விருது வழங்கும் விழா துரைசாமிபுரம் செல்லக்கண்ணு அம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று 15.08.2021 மாலை 06.30மணிக்கு திருச்சி துரைசாமிபுரம் செல்லகண்ணு அம்மாள் மண்டபத்தில் நடைபெற்றது.

2

மேலும் விழாவில் சிஎஸ்சி டிஜிட்டல் கோர்ஸ் அகாடமி சார்பாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு (PMGDSA) மற்றும் CSRI டிப்ளமோவுகான சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக CLARES சட்ட உதவி மையத்தின் யோவான், சென் ஜோசப் கல்லூரியின் பேராசிரியர் ஜெயசந்திரன், டவாய்ஸ் டிரஸ்ட் நிறுவனர் கிரோஹரி ஆகியோர் கலந்து கொண்டு 70 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டடினார்கள்.

இதில் அந்தோணி, தாய்வீடு தொண்டு நிறுவனர் சிவகுமார், பாக்கியராஜ் , அந்தோணிராஜ் சித்ரா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான வேர்கள் விருது 2021 வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்வில் கணிப்பொறி அறிவு இந்த தலைமுறைக்கு இன்றியமையாதது என்பதனை உணர்ந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் நிறைந்த துரைசாமிபுரத்தில் இத்தகைய சேவை தொடர்வது உண்மையில் பாரட்டவேண்டிய செயல்பாடு என்று வேர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் அடைக்கலராஜாவை விழாவில் பங்கேற்றவர்கள் பாராட்டினர்.

3

Leave A Reply

Your email address will not be published.