திருச்சி திமுக எம்எல்ஏக்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி 300 பேருடன் திமுகவில் இணைந்தார் !

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் சிறப்பாக செயல்படுவதாகவும், தொடர்ந்து மக்கள் நல பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறி அதிமுகவின் மண்ணச்சநல்லூர் பகுதியின் முக்கிய நிர்வாகியாக இருந்த எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முருகானந்தம் போஸ்டர் அடித்தார்.
இதையடுத்து அதிமுக தலைமை முருகானந்தத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது .
இதையடுத்து திமுகவில் இணைய முடிவெடுத்த முருகானந்தம் நேற்று சமயபுரம் நால்ரோடு பகுதியில் இருந்து தனது ஆதரவாளர்கள் 300 பேருடன் ஊர்வலமாக சென்று சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டார். இதில் திமுகவின் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
