ரவுடியை கிண்டல் செய்தவர், காரில் வைத்து கடத்தல் ; திருச்சி அருகே பரபரப்பு !

0

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பிரபு, அஜித் குமார் என்ற சகோதரர்கள் திருவரம்பூர் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த பாலா என்பவரிடம் காரை வாடகைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில் அந்த கார் பழுதாகி உள்ளதாக தெரிகிறது. இதனால் பிரபுவிற்கும், பாலா விற்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பாலா தனது நண்பரான பாட்டில் மணியை வைத்து தொலைபேசி வழியாக மிரட்டல் விடுத்திருக்கிறார். ஆனால் மிரட்டலை பொருட்படுத்தாத சகோதரர்கள் இருவரும் மிரட்டல் விடுத்த ரவுடி பாட்டில் மணியை கிண்டல் செய்துள்ளனர்.

ஆத்திரமடைந்த பாலா மற்றும் பாட்டில் மணி ஆகிய கும்பல் அஜீத் குமாரை திருவரம்பூர் அண்ணா வளைவு அருகே காரில் வைத்து கடத்திச் சென்றது. மேலும் அவரை தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து துவாக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கார்த்தி, பாட்டில் மணி ஆகியோர் ஆகியோரை தேடி வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.