திருச்சியில் இருந்து விவசாயிகள் டெல்லி பயணம் !
ஒன்றிய அரசின் 3−வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கு பெறுவதற்காக திருச்சியிலிருந்து 40 மேற்பட்ட விவசாயிகள் டெல்லி புறப்பட்டனர். தமிழ்நாடு விவசாய சங்க திருச்சி மாவட்ட செயலாளர்களை சிவசூரியன் தலைமையில் விவசாயிகள் டெல்லி புறப்பட்டனர். மேலும் புறப்படும் முன் திருச்சி ரயில் நிலைய வளாகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் விவசாய சங்கத்தின் நிர்வாகிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி, ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நடராஜன், சுரேஷ், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் வழியனுப்பினர்.
இவர்கள் இன்று காலை 9−மணிக்கு திருச்சி ரயில்வே சந்திப்பில் இருந்து வைகை விரைவு வண்டியில் பயணம் செய்தனர்.