திருச்சியில் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு விழிப்புணர்வு !

0
1

தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் பெருமளவில் நடந்து வருகிறது. இது குறித்து தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சமூக நலத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் சமூக நலத்துறை அலுவலர் தலைமையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு முகாம் கடந்த 6ஆம் தேதி முதல் வரும் 20ஆம் தேதி வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 20 முதல் 30 ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆலோசனையும் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
அதேசமயம் கிராமப்புற பகுதிகளில் தான் குழந்தை திருமணம் பெருமளவில் நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

3

Leave A Reply

Your email address will not be published.