அச்சுறுத்தும் பாம்புகள் – 8 நாள் போராட்டம் – 158 பாம்புகள் பிடிபட்டன ; திருச்சியில் பரபரப்பு!

0
1

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள மொண்டிப்பட்டி அருகே செயல்படக்கூடிய தமிழ்நாடு அரசின் காகித தொழிற்சாலை உள்ளது. இது பல நூறு ஏக்கர்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆலையில் பணியாற்றுபவர்கள் தங்குவதற்கான குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு வசித்து வருகின்றனர்.

அந்தப் பகுதியில் பாம்புகள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், இரவு நேரங்களில் வெளியே செல்வதற்கு கூட அச்சமாக இருப்பதாகவும் மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் காகித தொழிற்சாலை நிறுவனத்திடம் புகார் அளித்தனர்.

தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் காகித தொழிற்சாலை நிறுவனம் சென்னையில் உள்ள இருளர் பாம்பு பிடிக்கும் தொழிற்சங்கத்தினர் வரவழைத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பாம்புகளை பிடிக்க கூறினார்.
இதையடுத்து இருளர் பாம்பு பிடிக்கும் தொழிற்சங்கத்தை சேர்ந்த பலர் 8 நாட்கள் தொடர் முயற்சிக்கு பிறகு 158 பாம்புகளை பிடித்துள்ளனர். அவற்றில் பல பாம்புகள் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2

இப்படி பிடிக்கப்பட்ட பாம்புகள் கண்ணாடி விரியன், நல்ல பாம்பு, தண்ணீர் பாம்பு உள்ளிட்ட 15 வகை பாம்புகள் பிடிக்கப்பட்டு உள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.