திருச்சியில் புதிய உயர்மட்ட மேம்பாலம் ; அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

0
1

திருச்சி மாவட்டம் கலையரங்கம் திருமண மண்டபத்தில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலன் துறை அமைச்சர் மெய்யநாதன்,தமிழக அரசு கோவி செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் எம்எல்ஏக்கள் பங்குபெற்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு கூறுகையில், திருச்சி போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் உயர்மட்ட பாலம் தேவைப்படுகிறது. அது சம்பந்தமான கோரிக்கைகளும் வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று திருச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விரைவில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.


மேலும் ஜங்ஷன் மேம்பாலம் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் வழியாக தொடர்புகொண்டு மாற்று இடம் தருகிறோம் என்றும், அதற்கு ஈடான தொகைகளை தருகிறோமென்றோம் கூறியுள்ளோம். மேலும் கடிதம் அனுப்பியுள்ளோம் என்று கூறினார்.

2

கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.