ஐந்திணை உணவுகள் – ஓர் இடத்தில்..!

0
1

 

அழகான பெயர்ச்சொல் ஐந்திணை. ஆரோக்கியமான உணவுப் பொருட்களை கொண்டு, திருச்சி, மண்ணச்சநல்லூர், எதுமலை சாலையில் அமைந்துள்ளது சிறுதானிய அங்காடி ‘ஐந்திணை’.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என தமிழகத்தின் ஐவகை நிலங்களிலும் விளையும் சிறுதானிய வகைகளை .தருவித்து தருகிறது ‘ஐந்திணை’ சிறுதானிய அங்காடி. பிஞிதிசி வங்கியில் பணியாற்றிய சிவப்பிரியா, சொந்தமாக தொழில் செய்ய விரும்பி, பணியிலிருந்து விலகி, தொடங்கப்பட்ட அங்காடி ‘ஐந்திணை’.

2

“நம் தமிழர்கள் கால சூழலிற்கு ஏற்ப உணவினை உண்டே நோயிலிருந்து தங்களை தற்காத்துக் கொண்டனர். நாம் அதையெல்லாம் மறந்து துரித உணவுகளில் கவனம் செலுத்தியதாலேயே இன்று நோய்களும், மருத்துவ மனைகளும் பெருகிவிட்டன. இந்நிலையை மாற்ற உணவே மருந்து என்ற கோட்பாட்டை கொண்டு வாழ்ந்த தமிழர்களின் உணவினை அனைவருக்கும் வழங்கும் எண்ணத்தோடே ‘ஐந்திணை’ சிறுதானிய அங்காடியை தொடங்கினோம்.

முதலில் மரச்செக்கு கொண்டு தரமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை வாடிக்கையாளர்களுக்கு  வழங்கி னோம். அதில் எங்களுக்கு கிடைத்த நன்மதிப்பை தொடர்ந்து சிறுதானிய பொருட்களை பல்வேறு இடங்களில் இருந்து வரவழைத்து விற்பனை செய்து வருகிறோம்.

வழக்கமாக நாம் பொன்னி, சம்பா, ஐ.ஆர்.20 போன்ற வழக்கமான அரிசி வகைகளையே வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் காலச் சூழலிற்கேற்ப நம் உடல் ஏற்கும் பல்வேறு அரிசி வகைகளை நம் முன்னோர்கள் விளைவித்து உண்டு வந்தனர். இன்றைய நிலையில் அப்படியான 138 அரிசி வகைகள் உள்ளது.

அவற்றில் வரகு, திணை, பனிவரகு, மட்டை அரிசி, கருங்குருவை, காட்டுயானம், மூங்கில் அரிசி, கருடன் சம்பா, பூரி சொர்ண மல்லி, தங்க சம்பா, குழிவெடிச்சான், பிசிணி, காலா நமக் அரிசி, சூரக்குடுவை அரிசி, ராஜமுடி அரிசி, குள்ளக்கார் அரிசி என 40க்கும் மேற்பட்ட அரிசி வகையினை எங்கள் அங்காடியில் விற்கிறோம்.

மேலும் வரகு, கம்பு, கருப்பு கவுனி, சோளம், கொள்ளு என பத்துக்கும் மேற்பட்ட சிறுதானிய அவல், எண்ணெய் வகைகளில் வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், புங்கை எண்ணெய், கருஞ்சீரக எண்ணெய்களும், தோல் அரிப்பை நீக்கும் ரோஸ் பெடல் சோப், விட்டமின் சி அதிகம் கொண்ட பீட்ரூட் சோப், பாக்டீரியா தொற்று தாக்காத வேப்பிலை சோப்பு, தோல் பாதிப்பைத் தடுக்கும் குப்பைமேனி சோப், பாசிப்பயறு சோப், கரும்புள்ளியை நீக்கி மினுமினுப்பைத் தரும் உருளைக்கிழங்கு சோப், ஆலுவேரா சோப், கடலை மாவு சோப்பு, பப்பாளி சோப்பு, கஸ்தூரி மஞ்சள் சோப், வெட்டி வேர் மூலிகை சோப், நலங்கு மாவு, முல்தானி மட்டி உள்ளிட்ட அனைத்தும் தரமாக தயாரித்து வழங்குகிறோம்.

அத்துடன் நாங்கள் தயாரித்து வழங்கும் உரலில் இடித்த இட்லி பொடி, துளசி ரசப் பொடி, அதிமதுர ரசப் பொடி, பிரண்டை பொடி, ஆம்சூர் பொடி, சுக்குப் பொடி, நார்த்தங்காய், ஆவக்காய், பூண்டு போன்ற ஊறுகாய்களும், வெந்தயம் தக்காளி தொக்கு, பிரண்டை தொக்கு, வரகு, சாமை, கம்பு, ராகி உள்ளிட்ட சிறுதானியங்களில் செய்யப்பட்ட இனிப்பு உருண்டை மற்றும் பிஸ்கட் வகைகள், உளுந்து அப்பளம், அரிசி, பீட்ரூட், பூண்டு, கஸ்தூரி மேத்தி உள்ளிட்ட ஏராளமான வடகங்கள் சுவையாகவும், உடலிற்கு ஆரோக்கியமானதாகவும் கொண்டது.

சம்பா ரவை நூடுல்ஸ், வெள்ளை சோளம் நூடுல்ஸ், திணை நூடுல்ஸ், கொள்ளு சேமியா, மல்டி மில்லட் சேமியா, ராகி சேமியா, சிறுதானியக் கஞ்சி மிக்ஸ், அடை மிக்ஸ், சப்பாத்தி மிக்ஸ் கம்பங்கூழ் மிக்ஸ், உளுந்தம் களி மிக்ஸ், வரகு பாஸ்தா, திணை பாஸ்தா, சம்பா ரவை பாஸ்தா, முருங்கைக்கீரை பாஸ்தா மற்றும் நாட்டுச் சர்க்கரை பிஸ்கட், தரமான பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆளி, சப்ஜா, சூரியகாந்தி, கீன்மா போன்ற விதைகளும், மலைத் தேன், தேனில் ஊறிய அத்திப்பழம், மஞ்சள் திராட்சை, குல்கந்து, ஆலபக்ரா என உடல் நலத்தை காக்கும் அத்தனை விதமாக பொருட்களும் எங்கள் கடைகளில் கிடைக்கும்” என்றார்.

3

Leave A Reply

Your email address will not be published.