கார்ப்பரேட் தரத்தில், வீட்டிலேயே தயாரிக்கும் ஸ்ரீரங்கத்து சாக்லேட்

0
1

திருச்சியில் கார்ப்பரேட் கம்பெனி களுக்கு இணையாகவும், தரமாகவும், சுவையாகவும், விலை குறைவாகவும் strawberry chocolate, mango chocolate, orange chocolate,pista chocolate, pineapple chocolate என பல சுவைகளில் ஒரு பெண்மணி தனது வீட்டிலேயே தயாரிக்கிறார் என்றால் ஆச்சரியமாக உள்ளதா..?

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த லலிதா சீனிவாசன் என்பவர் தான் அந்த பெண்மணி.
தஞ்சாவூரில், மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப கழகம், (IICPT) வழங்கிய சாக்லேட் மற்றும் கேக் தயாரித்தல் & பதப்படுத்துதல் தொழில்நுட்ப பயிற்சி பெற்று சுமார் எட்டு வருடங்களாக தனது வீட்டிலேயே சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் தான் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களுக்கு மட்டுமே சாக்லேட் தயாரித்துக் கொடுத்து வந்தவர் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு பிரபல ஷாப்பிங் மாலுக்கு சாக் லேட் கொடுத்து வந்தார்,

2

தொடர்ந்து தெரிந்தவர்களின் திருமணத்திற்கு மணமக்கள் பெயர் போட்டு சாக்லெட் கொடுத்தார். அத்துடன் பூணூல் (உபநயனம்) அணியும் விசேஷத் திற்கும், நண்பர்கள், உறவினர்களின் குழந்தைகள் பிறந்த நாள் விழாவிற்கு பொம்மை வடிவில் சாக்லெட் செய்து கொடுத்து குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

இவரின் சிறப்பே நாம் விரும்பும் உருவத்தில் சாக்லேட் தயாரித்துக் கொடுப்பது தான். இந்த தீபாவளிக்கு மத்தாப்பு, சரவெடி, புஸ்வானம் வடிவில் சாக்லெட் தயாரித்து அசத்தி வருகிறார் லலிதா சீனிவாசன். மேலும் இவர் Eggless கேக் மற்றும் குக்கீஸ் தயார் செய்து கொடுக்கிறார்.

திருச்சி நகரில் உள்ள இரு சக்கர, நான்கு சக்கர வாகன விற்பனை ஷோரூம் களுக்கு புல்லட், ஸ்கூட்டர், கார் வடிவில் சாக்லெட் தயாரித்து கொடுக்கும் முயற்சி யில் வெற்றி பெற்றுள்ளார். இவரது வீட்டு தயாரிப்பு சுத்தமாகவும், தரமாகவும், சுவையாகவும் செய்து கொடுத்து பலரின் நன்மதிப்பை பெற்று உள்ளார். குறிப்பாக குழந்தைகள் மத்தியில்.!

3

Leave A Reply

Your email address will not be published.