திருச்சியில் முதலுதவி அளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு பயிற்சி!

0
1

திருச்சி மாநகர காவல்துறை மற்றும் எலும்பு மூட்டு மருத்துவ சங்கம் சார்பில் திருச்சி மாநகரில் உள்ள போக்குவரத்து காவலர்கள் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்களுக்கு இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது போன்ற பயிற்சிகள் காவலர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் எலும்பு மூட்டு மருத்துவர் சங்கத்தலைவர் ஜெய் கிரீஸ், எலும்பு மூட்டு மருத்துவ சங்க செயலாளர் முகேஷ் மோகன், பொருளாளர்ரமேஷ் பிரபு போன்றோர் முதலுதவி சிகிச்சை குறித்து காவல்துறையினருக்கு விளக்கி உரையாற்றினார்.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்களை உடனுக்குடன் மருத்துவமனையில் சேர்க்கவும் அதற்குமுன் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் காவலர்களுக்கு செய்து காட்டப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.