நரிக்குறவர் நல வாரியம் ; திருச்சி கலெக்டர் அழைப்பு!

0
1

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுவது, தமிழக அரசால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நலத் துறை சார்பில் செயல்படும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் நரிக்குறவர் சமூக மக்கள் தங்களை இணைத்துக்கொண்டு அரசின் பல்வேறு நலத் திட்டங் களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டவர் செய்யப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவி, விபத்து ஈட்டுறுதித்திட்டத்தின் கீழ் விபத்து மரணம், விபத்தில் ஏற்படும் ஊனம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவு, கல்வி உதவித்தொகை , மகப்பேறு உதவித்தொகை, தொழில் தொடங்க உதவித்தொகை, தொழில் தொடங்க மானியம் போன்ற பல்வேறு திட்டங்களை பெற நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார். மேலும் திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0 43 1 – 2 40 18 60 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு மேலும் விவரங்களை கேட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.