கோரிக்கையை தெரியப்படுத்திய உடனே தீர்வு ; எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உடனடி நடவடிக்கை!

0
1

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 35 வது வார்டு சாதனா நகரில் இருபது வருடங்களுக்கு முன்பு பைப்லைன் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த பைப் லைனில் அடிக்கடி மரங்களின் வேர்கள் சென்று குடிநீர் தடையை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

இந்த நிலையில் தற்போதும் பைப் லைனில் அடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலமாக குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது, இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சாதனா நகர், சரஸ்வதி நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு இமெயில் வழியாக புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து எம்.எல்.ஏவை தொடர்பு கொண்டு புகார்களை தெரியப்படுத்த, உடனடியாக சில மணி நேரத்திற்குள் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு சாதனா நகரில் குடிநீர் குழாயில் ஏற்பட்டிருக்கக் கூடிய அடைப்பை உடனடியாக நீக்குவதற்கு பரிந்துரை செய்தார்.

2

இதையடுத்து உடனடியாக பணியாளர்கள் அனுப்பப்பட்டு சாதனா நகரில் உள்ள குடிநீர் குழாய் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. இதில் 10 அடி நீளம் உள்ள மரத்தின் வேர், குடிநீர் குழாயில் சிக்கி அடைப்பை ஏற்படுத்தியது தெரியவந்து பிறகு தண்ணீர் வரும் வகையில் குழாய் சீரமைக்கப்பட்டது.
இதையடுத்து எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் இடம் புகாரை தெரியப்படுத்திய குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் மாசிலாமணி கூறுகையில், அடிக்கடி ஏற்படும் பிரச்சனை தான் இது என்றாலும் தற்போது மக்களிடம் மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரயில்வேயில் பணியாற்றும் எனது நண்பர் மூலமாக எம்.எல்.ஏ இனிகோவின் உதவியாளரின் எண் கிடைத்தது, அவரிடம் தொடர்பு கொண்டு கோரிக்கையை தெரியப்படுத்தினேன். உடனடியாக எம்எல்ஏ கவனத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடைப்பை ஏற்படுத்திய வேர்

மேலும் இந்த பகுதியில் உள்ள மற்ற பிரச்சனைகள் குறித்தும் எம்எல்ஏவை நேரில் சந்தித்து தெரியப்படுத்த உள்ளோம்.

3

Leave A Reply

Your email address will not be published.