தங்க பத்திரம் திட்டம் ; அஞ்சல் அலுவலகங்கள் அழைப்பு!

0
1

இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கப் பத்திரம் வாங்க அஞ்சல் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் திருவரங்கம் கோட்ட அஞ்சலக அழைப்பு விடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் தனிநபர் ஒரு ஆண்டுக்கு ஒரு கிராம் முதல் 4 கிலோ வரையும், தொண்டு நிறுவனங்கள் ஒரு ஆண்டிற்கு ஒரு கிராம் முதல் 20 கிலோ வரையிலும் வாங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பாத்திரத்தில் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் என்று கொடுக்கப்பட்டுள்ளது, தேவையெனில் 5,6,7 வருடத்தில் மட்டும் தேதியில் முன் முதிர்வு வசதி ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி உண்டு.
இந்தத் திட்டத்திற்கு 9.8. 2021 முதல் 13 .8. 2021 வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதார் கார்டு, பான் கார்டு, பேங்க் பாஸ்புக் முதல் பக்கம் இன்வெஸ்டர் ஐடி போன்ற ஆவணங்களை வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

2

மேலும் விவரங்களுக்கு ஸ்ரீரங்கம், பெரம்பலூர், துறையூர், பிச்சாண்டவர் கோயில், திருவானைக்கோவில், சமயபுரம், மண்ணச்சநல்லூர், முசிறி தொட்டியம், காட்டுப்புத்தூர், பாடலூர், செட்டிகுளம், லெப்பைக்குடிக்காடு, வேப்பந்தட்டை, மேட்டுப்பாளையம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம், குன்னம் மற்றும் தங்கள் அருகில் உள்ள அஞ்சல் கிளை அலுவலகங்களை அணுகலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இது குறித்த மேலும் தொடர்புக்கு வணிக வளர்ச்சி அலுவலர் 97 89 73 73 69, அஞ்சல் கண்காணிப்பாளர்

99 40 65 59 48 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு விபரங்கள் அறியலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

3

Leave A Reply

Your email address will not be published.