குழந்தையை கூட்டி சென்ற கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார்!

0
1

திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்த சரவணன், வைஜெயந்தி இருவருக்கும் ஆறு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. மேலும் இருவருக்கும் 5 வயதில் ஒரு மகன் உள்ளார்.

2

இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் குழந்தையையும் வைஜெயந்தி தன்னோடு வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையே சரவணன் குழந்தையை பார்க்க அடிக்கடி சென்று வந்திருக்கிறார். அதே சமயம் கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தனது மனைவியை தன்னோடு சேர்த்து வைக்குமாறு மனுவும் அளித்திருக்கிறார். இதையடுத்து போலீசார் சமரசம் பேச முயற்சிக்கும் வைஜெயந்தி, சரவணன் உடன் சேர்ந்து வாழ முன்வரவில்லை, அதேசமயம் இனி குழந்தையையும் பார்க்க வரக்கூடாது என்று கூற.

சரவணன் நேற்று விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தன்னோடு அழைத்துச் சென்று விட்டார். இதை அடுத்து வைஜெயந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது போலீசார் சரவணனை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்