மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவி ; திருச்சி கலெக்டர் தகவல்!

0
1

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பது, தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கை, கால்கள், பார்வையற்றவர், காது கேளாதவர், மற்றும் வாய் பேசாதவர் போன்ற மாற்றுத் திறனாளிகளை நல்ல நிலையில் உள்ளவர் திருமணம் புரியும்போது திருமண நிதி உதவித் திட்டம் மூலம் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

2

இந்த திட்டத்தின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் திருமணம் புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 25 ஆயிரம் மட்டும் 8 கிராம் தங்க நாணயம், தம்பதியரின் எவரேனும் ஒருவர் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்தவராக இருந்தால் 50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும், அதோடு திருமணம் நடைபெற்ற ஓர் ஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பிப்பவர்கள் திருமண அழைப்பிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், கல்வி சான்றிதழ் நகல், தம்பதியர் இருவருக்கும் முதல் திருமணம் என்பதற்கான சான்று (விஏஓ விடம் இருந்து பெற்றுத் தர வேண்டும்). இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி 04 31 24 12 59 0 தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டு அறியலாம்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்