சிலம்பம் பயிற்சிக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் இடம் ; விளையாட்டில் சாதனை புரிந்த சிறுமியிடம் எம்எல்ஏ உறுதி!

0
1

திருச்சி சுப்ரமணியபுரம் ரஞ்சிதபுரத்தைச் சேர்ந்த இரா.மோகன் – மோ.பிரகதா. இவர்களின் மகள் மோ.பி.சுகித்தா தமிழர்களின் வீர விளையாட்டு சிலம்பம் பயின்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பல்வேறு பதக்கங்களை பெற்று உள்ளார்.

2

மேலும் சுதந்திர போராட்ட வீரர் நல்லகண்ணு முன்னிலையில் திருச்சியில் உலக சாதனை படைத்து, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டையும் பெற்று, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னோடி பெண்மணி விருதும் பெற்று இருக்கிறார். அதோடு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் வழங்கிய இளம் கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

4

இப்படி பல சாதனைகள் புரிந்து வரும் சிறுமி சுஜிதாவை திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் நேரில் சென்று சந்தித்து பாராட்டினார்.
மேலும் விரைவில் முதல்வர் ஸ்டாலினை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, விரைவில் திருச்சியில் தொடங்கப்பட இருக்கும், ரைபிள் கிளப்பில் கௌரவ உறுப்பினராக பரிந்துரை மற்றும் சிலம்ப பயிற்சிக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் களம் அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர் டோல்கேட் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்