திருச்சியில் மணல் கடத்தல் குறித்து புகார் அளித்தவரின் வீடு சூறை ; கடத்தவும் முயற்சி !

0
1

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அப்பாதுரை ஊராட்சி தெற்குப்பகுதி கொள்ளிடம் ஆற்றில் தினமும் மணல் கொள்ளை நடைபெற்று வந்திருக்கிறது. மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவர் போலீசுக்கு புகார் கொடுத்து பலமுறை தடுக்க முயற்சி எடுத்திருக்கிறார்.

இவ்வாறு மணல் திருட்டு பவர்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதாக மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் ராமதாஸ் என்பவர் நேற்று இரவு ரோட்டில் நின்று கொண்டிருந்த சிவானந்தத்தை காரில் வந்து கடத்த முயன்றிருக்கிறார். அப்போது அவர்களிடமிருந்து சிவானந்தம் தப்பித்து ஓடியிருக்கிறார்.

இந்த நிலையில் அவரைப் பின்தொடர்ந்து வந்த ராமதாஸ், அஜய், அருண், மதன், அப்பு, ராம்கி, சுதன், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் சிவானந்தத்தின் ஓட்டு வீட்டை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். மேலும் சிவானந்தத்தை தாக்கி உள்ளனர். இதையடுத்து அந்த பகுதி மக்கள் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை விரட்டினர். இதை தொடர்ந்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து சமயபுரம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 30 நபர்களை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.