பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் உடற்பயிற்சி வீடியோ ; உடற் கல்வியும் அதன் முக்கியத்துவமும்!

0
1

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான் பதவி ஏற்றது முதல் மாநிலம் முழுவதும் தனது துறை சம்பந்தமான பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த நேரம் புதிய கல்வியாண்டு தொடங்கியிருக்க கூடிய நேரம் என்பதால் துறை சம்பந்தமான பல்வேறு பணிகள், தொகுதி விசிட், கட்சிக்காரர்கள் சந்திப்பு, தேர்தலின்போது வெற்றி பெற்ற கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு என்று தொடர்ந்து பிசியாக இருந்து வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

இந்த கடின உழைப்பு களுக்கு மத்தியில் உடற்பயிற்சி செய்து, அதை உடற்கல்வியாக விவரித்து வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக ஷேர்களை குவித்துக் கொண்டிருக்கிறது.

2

திமுகவினர் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் அந்த வீடியோவை பகிர்ந்து, இளம் அமைச்சரின் கடின உழைப்பிற்கு அவருடைய உடற்பயிற்சி தான் காரணம் என்று பகிர்ந்து வருகின்றனர். அமைச்சர் தினமும் பல மணி நேரம் ஓடி ஆடி உழைப்பதற்கான வலிமை உடற்பயிற்சியின் மூலமே கிடைக்கும் என்றும் அதன்மூலம் கூறிவருகின்றனர்.

அதே சமயம் இன்றைய தலைமுறையிடம் உடற்பயிற்சி, ஓடி ஆடி விளையாடும் விளையாட்டுக்கள், உடல் ஆரோக்கியம் போன்ற எண்ணங்கள் எல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க தொழில்நுட்பங்களும், இணையதளங்களும், சமூக வலைதளங்களும், வீடியோ கேம்களும், செல்போன்களும் சூழ்ந்து ஆரோக்கியமற்ற தலைமுறையாக உருவெடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஒரு அமைச்சர் தன்னுடைய வேலை நேரங்களுக்கு மத்தியில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம், விளையாட்டுகளின் தேவை, உடல் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் போன்றவற்றை விளக்கியிருப்பதன் மூலம் இவை பேசுபொருளாக தற்போது மாறி இருக்கின்றது. மேலும் உடற் கல்வி சம்பந்தமான உரையாடல்களும் இன்று எழத் தொடங்கியிருக்கின்றன.

குறிப்பாக பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பு என்றால் அந்த வகுப்புகளை கணக்கு டீச்சர்கள் கையகப்படுத்தி கொள்வார்கள், இதுவே இன்று வரை பெரும்பான்மையான பள்ளிகளில் வழக்கமான நிகழ்வாக உள்ளது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இளைஞர் என்பதோடு, ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை ஆர்வம் உள்ளவர் என்பதால் இனி கணக்கு டீச்சர்கள் கையகப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.