ஆடிப்பெருக்கு….

0
1

தென்மேற்கு பருவ காற்றினால் பெய்த மழையினால்  ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு என்பர்.

இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் “ஆடிப்பட்டம் தேடிவிதை” என்பதற்கேற்ப பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது  நெல்,  கரும்பு  முதலியவற்றை விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். என்ற பழமொழியும் விளைந்தது.

மகாபாரதப் போரில் இறந்த வீரர்களை நினைவுப்படுத்தும் நாளாக இந்த ஆடிப்பெருக்கு நாளை கருதப்படுக்கிறது.

2

ஆடிப்பெருக்கன்றுதான் சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணாக பார்வதி தேவிக்கு காட்சி கொடுத்ததுடன் ஆசிர்வதித்தனர். சங்கரநாராயண தத்துவம்.

காவிரி கரையை ஆண்ட அக்னியில் பிறந்த ருத்ரன் என்ற மன்னன் ஆடி மாதம் முதல் நாள் இலங்கைக்கு போருக்கு புறப்பட்டார்..

அப்போது தனது மனைவியிடம், தான் போருக்கு செல்வதாகவும் போருக்கு போகும் தான் திரும்பவில்லை என்றால் எனக்கு என்னவாயிற்று என தெரிந்து கொள்ள, வீட்டில் உள்ள காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வைக்கும் படியும், தன்னுடன் ஒரு நாயை அழைத்து செல்வதாகவும் போரில் தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் இந்த நாய் திரும்பி வந்து விடும் என்றும் கூறிவிட்டு புறப்படார்.

ஆனால் அவர் சென்ற சிறிது நேரத்தில் ஏற்றி வைத்த விளக்கு அணைந்து போனது.

அரசன் போகும் வழியில் காவிரி பெருக்கெடுத்து ஓடியதால், அவர் கூட்டி சென்ற நாயால் ஆற்றை கடக்க முடியாமல் வீடு திரும்பியது.

இதனால் மீண்டும் அரண்மனையை நோக்கி வந்த  நாயை கண்ட மனைவி, மந்திரமாலா போருக்கு சென்ற தனது கணவர் இறந்து விட்டதாக நினைத்து, ஊரை கூட்டி சடங்குகளை முடித்து விடுகிறார்.

ஆனால் போரில் பெறும் வெற்றி அடைந்து மீண்டும் அரண்மனைக்கு வந்த ருத்ர மகாராஜாவுக்கு, தனது மனைவி தாலி, குங்குமம் இல்லாமல் இருந்தது பேரதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

பிறகு நடந்ததை தன் மனைவிக்கும், ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தி, காவிரி கரையில் வைத்து மீண்டும் தாலிக்கட்டிக்கொள்கிறார். அந்த நாள்  தான் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது.அதனால்தான் கைவிளக்கை ஏற்றி ஆற்றில் விடுகின்றனர்.

இன்று வரையிலும், புது மண தம்பதிகளை ஆடி மாதத்தில்  பிரித்து வைத்து 18நாட்களுக்கு பிறகு மீண்டும் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதாக கூறப்படுகிறது.

இன்று பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பத்தி, , மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி உள்ளிட்டவையும், கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கும், காவிரித்தாய்க்கு நன்றி சொல்லும் விதத்திலும் படைத்து வழிபட்டு அதனை ஆற்றில் விடுகின்றனர்.

நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.