வேலையை விட்டு தூக்கியதால் வண்டிக்கு தீ வைத்த இளைஞர் கைது !

0
1

.திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தில்லைநகர் 6வது கிராஸில் உள்ள மெடிக்கல் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மெடிக்கல் நிர்வாகம் பாலமுருகனை வேலையிலிருந்து எடுத்துள்ளது. இதனால் மனமுடைந்த பாலமுருகன் கடந்த புதன்கிழமை அன்று மெடிக்கலுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

2

பிறகு அவரை அங்கிருந்து அனுப்ப, மெடிக்கல் பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதில் 4 வாகனங்கள் முழுமையாக தீப்பற்றி எரிந்தன, இது தொடர்பாக மெடிக்கல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்