திருச்சியில் சிறுத்தை ; இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி!

0
1

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஆங்கியம் ஊராட்சி பகுதியில் சிறுத்தை சுற்றி வந்துள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற அதே ஊரைச் சேர்ந்த நபர்களை தாக்கியதாக அரசு மருத்துவமனையில் இரண்டு பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2

இதையடுத்து அந்த பகுதியில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் என்பது இதுவே முதல் என்பதால் திருச்சி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4

மேலும் அந்த பகுதிக்கு சிறுத்தை எப்படி வந்தது என்று கேள்விகளோடு, சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியையும் செய்ய அந்த ஊர் மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்