திருச்சியில் வீடு வீடாக வாங்கப்படும் குப்பைகள்; சாலையில் கொட்டப்படும் அவலம் !

0
1

திருச்சி மாநகராட்சியில் உள்ள குப்பைத் தொட்டிகள் அனைத்தும் முழுமையாக எடுக்கப்பட்டு வீடு வீடாக சென்று குப்பைகளை பெறப்பட்டு வருகிறது.

மக்கள் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்களிடம் கொடுப்பதை ஊக்குவிப்பதற்காகவே சாலைகளில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டி அகற்றப்பட்டதாக திருச்சி மாநகராட்சியின் சார்பில் கூறப்பட்டிருக்கிறது.

2

இந்த நிலையில் பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட காஜாமலை மெயின் ரோட்டில் ஆர்.பி.எஃப் கிரவுண்டுக்கு எதிரில் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று சேகரிக்கப்படும் குப்பைகளை நடுரோட்டில் கொட்டி சுகாதார சீர்கேட்டை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

4

பொதுமக்கள் ரோட்டு ஓரத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் ரோட்டு ஓரத்திலேயே கொட்டப்படுகிறது.

இது குறித்து திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, திருச்சி மாநகராட்சியிடம் குப்பைகளை கையாள்வதில் சரியான தெளிவு இல்லை, அதன் காரணமாகவே அரியமங்கலம் குப்பை கிடங்கு தற்போது அபாயமான நிலையில் உள்ளது. முன்னாள் மாநகராட்சி ஆணையர் அறியமங்கலம் குப்பை கிடங்கில் குப்பைகளை மறுசுழற்சி செய்ய 10 நவீன இயந்திரங்கள் வாங்கினார். அதனுடைய நிலை தற்போது என்ன, திருச்சியில் பல்வேறு பகுதிகளில் இது போன்று சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன, மேலும் வாய்க்கால் ஓரமாகவும், ஆற்றின் ஓரமாகவும் குப்பைகள் கொட்டப்படுகிறது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்