போலி பாஸ்போர்ட் திருச்சிக்கு வந்த நபர் விமான நிலையத்தில் கைது!

0
1

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து நேற்று காலை வந்த விமானத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் வந்தார்.

2

அவர் பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர், அப்போது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தனர். இதில் அவர் ராஜேந்திரன் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட காளிமுத்து பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்