திருச்சியில் திருட்டுப் போன செல்போனை கண்டுபிடித்த கல்லூரி மாணவர் ; 3 பேர் கைது!

0
1

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த எம் குலுக்கப் பட்டியைச் சேர்ந்தவர் பூவரசம், இவர் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் செல்போனை வைத்து விட்டு இரவு உறங்கி விட்டார், காலை எழுந்து பார்க்கும் போது போன் காணவில்லை.

2

அதேசமயம் இன்ஜினியரிங் மாணவர் பூவரசன் தன்னுடைய போனில் ஜிபிஎஸ் டிராக்கிங் போன்ற வசதிகளை செய்து வைத்திருந்தார். இதையடுத்து செல்போன் காணாமல் போனதை அடுத்து நண்பருடைய செல்போன் மூலமாக தன்னுடைய செல்போனை டிராக் செய்யும் பொழுது அதே பகுதியில் இருப்பது தெரியவந்ததையடுத்து தனது நண்பர்களுடன் அந்தப் பகுதிக்குச் சென்றார் பூவரசன். பூவரசனை பார்த்ததும் மூன்று பேர் தப்பிக்க முயற்சி செய்கின்றனர், அவர்களைத் துரத்திப் பிடித்து வையம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் விசாரித்ததில் ராஜா அவரது தம்பி தினேஷ் குமார், வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் பூவரசன் செல்போனை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்