21 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் ; 97 கடைகளில் ஆய்வு!

0
1

திருச்சியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா, பான்மசாலா, பான்பராக், ஹான்ஸ், சைனி கையினி போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், வணிக வரித்துறையினர், திருச்சி காந்தி மார்க்கெட், கமலத் தெரு, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 97 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

2

மேலும் 21 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபோன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் உணவில் கலப்படம் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஏதேனும் விற்பனை செய்யப்பட்டால் 95 85 95 95 95 என்ற எண்ணுக்கும் அல்லது 94 44 043 22 என்ற எண்ணுக்கும் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரமேஷ்பாபு கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்