பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை குப்பை தொட்டியில் இருந்து மீட்பு ; வீசிச் சென்றது யார் என போலீஸ் விசாரணை!

0
1

திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் குப்பைகளை சேகரிக்க மாநகராட்சி பணியாளர்கள் நேற்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

2

அப்போது குப்பைத்தொட்டி கிடக்கும் இடத்திற்கு அருகே பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்க, மாநகராட்சி பணியாளர்கள் பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆண் பச்சிளம் குழந்தை துணியுடன் கிடந்தது. இதை அடுத்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க காவல்துறையினர் வந்து குழந்தையை மீட்டு தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்