தொழிலில் நஷ்டம் ; திருச்சி தொழிலதிபர் தற்கொலை!

0
1

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் இவர் ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வர சக்திவேல் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

2

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்