திருச்சியில் 20,00,000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் ; திருச்சி போலீஸ் அதிரடி!

0
1

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களின் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 29.07.2021 – ந்தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பென்சனர் காலனி மற்றும் எடத்தெரு ஆகிய இடங்களில் குடோன்களில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை மற்றும் பாலக்கரை காவல் நிலைய காவலர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை செய்தனர்.

Helios
2

அச்சோதனையில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூபாய் ரூ .20,00,000 சந்தை மதிப்புள்ள 55 மூட்டைகளில் இருந்த சுமார் 1800 கிலோ ஹான்ஸ், கூல் லிப் சைனி கைனி, பான்பராக், ஆர்.எம்.டி பேன்ற தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, இதில் சம்பந்தப்பட்ட பூமிநாதன், இளங்கோ, வடிவேல் , ஹரிஹரன் , பழனிகுமார் , ஆகிய 5 நபர்கள் கைது செய்தும், மேலும் பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் குற்றச் செயலுக்கு பயன்படுத்தி வந்த ஒரு டாடா ஏசி நான்கு சக்கர வாகனம் , ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டினார் . மேலும் திருச்சி மாநகரில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.