திருச்சியில் தீண்டாமை சுவர் ; உடனடியாக அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்!

0
1

திருச்சி மாநகராட்சி 30வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ்காந்தி நகர் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிக்கு அருகே ராஜிவ் காந்தி நகர் பின்புறம் உள்ள உள்ள நிலத்தில் இது 150 அடி நீளத்திற்கு 9 அடி உயரத்தில் சுவர் அனுப்பப்பட்டிருக்கிறது.

2

இதனால் ராஜீவ் காந்தி நகர் பகுதிக்கு வரும் ஐந்து தெருவைச் சேர்ந்த மக்களுக்கு பாதை தடைப்பட்டு இருப்பதோடு, நூதன முறையில் தீண்டாமையை கடைப்பிடிப்பதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பு ராஜீவ்காந்தி சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுவர் தீண்டாமை சுவர் என்றும் அதை உடனடியாக எடுக்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களிடையே தீண்டாமையை விதைக்கும் வகையாக, பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சுவர் எழுப்பப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்மலை பகுதி செயலாளர் கார்த்திகேயன் கூறினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சம்பத், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன், பொன்மலை பகுதி குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், மணிமாறன், புவனேஸ்வரி, சீனிவாசன், ஜெயபால் மற்றும் அந்த பகுதி மக்கள் என்று பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்