திருச்சி மாவட்ட குழந்தை நல குழு தலைவர், உறுப்பினர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு!

0
1

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு,

2015 ஆம் ஆண்டு இளைஞர் நீதி குழந்தைகள் பராமரிப்பு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நல குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு தகுதிவாய்ந்த சமூக பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இப்பிரிவில் ஒரு பெண் உள்ளிட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பு ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

2

இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது ஏழு வருடங்களாக ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும். குழந்தைகளின் உளவியல் சட்டம் சமூகப்பணி சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறைவாகவும், 65 வயதை பூர்த்தி செய்யாத வகையில் இருக்க வேண்டும்.
நியமிக்கப்படும் அவர்கள் ஒரு குழுவில் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே செயல்பட முடியும். தொடர்ந்து பதவி வகிக்க இயலாது இதற்கான விண்ணப்பத்தை திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் இருந்தும் அல்லது https://trichirappalli.nic.in/ என்ற இணைய முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

4

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு திருச்சி கலையரங்க வளாகம் முதல் மாடி செயல்படுகிறது. அங்கு ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் மாலை 5.30 மணி வரை அலுவலகம் செயல்படும். மேலும் தகவலுக்கு 0431 24 13 055 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு கேட்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்