பிணை எடுக்க குடும்பத்தினர் வராததால் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த சிறுவன் தற்கொலை முயற்சி!

0
1

திருச்சி இபி ரோட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த 17 வயது சிறுவன் செவ்வாய்க்கிழமை கழிவறையில் மயக்கமான நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து காப்பக பணியாளர்கள் சிறுவனை மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

2

மேலும் சிறுவன் மயங்கி கிடந்த சம்பந்தமாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் சிறுவனிடம் நடத்தி விசாரணையில். சிறுவன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், குற்ற வழக்கு தொடர்பாக கைதாகி 30 நாட்களாக கூர்நோக்கு இல்லத்தில் இருந்ததும். ஆனால் குடும்பத்தினர் யாரும் வினை எடுக்க வராததால் மனமுடைந்து கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த பொருளை குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியிருக்கிறார்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்