சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை ; திருச்சி கோர்ட் உத்தரவு !

0
1

திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த பெற்றோருக்கு 6 வயது குழந்தை உள்ளது. மேலும் அதே பகுதியில் நடன ஆசிரியர் சரவண குமார் என்பவர் நடனப் பயிற்சி வழங்கி வந்துள்ளார்.

2

சரவணகுமார் இடம் 6 வயது சிறுமியின் நடனம் கற்பதற்கு பயிற்சி எடுத்து வந்திருக்கிறது, இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி மாலை பயிற்சி முடிந்து வந்த சிறுமி உடல் வலிப்பதாகவும், மேலும் நடந்ததை கூறியிருக்கிறார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்த சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து திருச்சி மகிளா கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வழக்கு விசாரணை முடிந்து, நேற்று நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். சரவணகுமார் தண்டனை நிரூபிக்கப்பட்டதால் 20 ஆண்டு சிறை 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார் மேலும் அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசாங்கம் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறார் ‌

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்