அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சி மாணவிக்கு கௌரவ டாக்டர் பட்டம்

0
1

அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சி மாணவிக்கு கௌரவ டாக்டர் பட்டம்

அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் பல்வேறு தரப்பட்ட சாதனையாளர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வி.ஐ.பி. ஏஜென்சி சேர்மென் A.மனோகரன் மற்றும் சேலம் ஜஸ்ட் வின் பிரைவேட் லிமிடெட் சேர்மேன் Dr.A. பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழக சேர்மன் Dr.A.M.ராய் பெர்னான்டோ அவர்கள் தலைமையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது.

4

திருச்சி காவேரி பாலம் அருகே உள்ள ராக்போர்ட் வியூ ஹோட்டலில் நடைபெற்றது திருச்சி மேலப்புதூர் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் சுகித்தா. இவர் கடந்த மூன்று வருடங்களாக தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை தனது சிலம்ப ஆசான் கலைசுடர்மணி திரு.எம்.ஜெயக்குமார் அவர்களிடம் முறைபடி சிலம்பத்தை கற்று தேர்ந்து சிலம்பத்தில் 5 புதிய உலக சாதனைகளும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கற்று தங்கம் வென்று, மேலும் தேசிய, மாநில மற்றும் மாவட்ட சிலம்ப போட்டிகளில் பங்குபெற்று இதுவரை 25 தங்கம் 12 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார்.
இவரை நமது இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி உயர்திரு. வெங்கையா நாயுடு அவர்கள் நேரில் அழைத்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2

மேலும் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி பிஸ்டல் சுடும் போட்டியில் பங்கு பெற்றும் தங்கம் வென்றுள்ளார். மேலும் யோகா குருஜீ கிருஷ்ணகுமார் அவர்களின் பயிற்சியில் யோகாவில் புதிய உலக சாதனையும் செய்துள்ளார். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு முன்னோடி பெண்மனி விருதும் கொடுத்து கௌரவ படுத்தியுள்ளார்கள்.
இவர் தான் கற்ற சிலம்ப கலையை தனது மூத்த ஆசான் ஜெயக்குமார் அவர்களின் அறிவுரை படி இலவசமாக பல அரசு பள்ளிகளுக்கும் சென்று கற்று கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனது 13 வயதிலேயே இத்தனை சாதனைகளை புரிந்த மோ.பி.சுகித்தா அவர்களுக்கு உலக தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா சார்பாக இளம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த பட்டமளிப்பு விழாவை திருச்சி ருத்ர சாந்தி யோகாலையா குருஜீ கிருஷ்ணகுமார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இளம் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதை அடுத்து திருச்சி மேலப்புதூர் செயின்ட் ஜோசப் பெண்கள் மேனிலை பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி சி.லூர்து மேரி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பெர்னா, சக்தி மற்றும் தேசிய கல்லூரி துணை முதல்வர் முனைவர்.D.பிரசன்னா பாலாஜி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்